டோனியை மதிக்காமல் பேசிக் கொண்டிருந்த கோஹ்லி-ரோகித்... வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் சோகம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியை மதிக்காமல் கோஹ்லி, ரோகித் மற்றும் ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடருக்கு அரையிறுதிப் போட்டி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், டோனியின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது.

போட்டி உலகக்கோப்பை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் எந்த போட்டி என்பது தெரியவில்லை. அதில் பந்து வீசும் பாண்ட்யாவிடம் கோஹ்லி மற்றும் ரோகித் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்க, அப்போது கீப்பிங் செய்வதற்காக டோனி சென்ற போது, அவரையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் இந்த வீடியோவைக் கண்ட டோனியின் ரசிகர்கள், வளர்த்துவிட்டவனையே மதிக்கமாட்டீங்கிறீங்கடா என்று கூறி, வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்