டோனி சொன்னது போன்றே பந்து வீசி நியூசிலாந்து வீரரின் விக்கெட்டை வீழ்த்தும் குல்தீப்... வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
165Shares

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி ஸ்டம்பிற்கு பின்னால் நின்று இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பட்டையை கிளப்பி வருகிறது.

ஆனால் அதே சமயம் டோனியின் சில ஆலோசனைகளும் கோஹ்லியின் வெற்றிக்கு பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாகவே டோனி எப்படி சொதப்பினாலும், அவர் அணியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒரு போட்டியில் டோனி சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் மற்றும் சஹாலுக்கு குறிப்பிட்ட திசையில் வீசும் படி கூற, அதன் படியே அவர்கள் பந்து வீச விக்கெட் விழுகிறது.

நியூசிலாந்து வீரர் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, பந்து வீச வரும் குல்தீப்பிடம், நீ சற்று கிரீசிற்கு வெளியே சென்று வீசு என்று கூற, குல்தீப்பும் அதே போன்று வீசுகிறார்.

அப்போது பந்தை தடுக்க முயற்சிக்கும் நியூசிலாந்து வீரர், பந்தை டோனியிடம் விட, உடனே டோனி அற்புதமாக பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை வீழ்த்துகிறார்.

அதே போன்று மீண்டும் குல்தீப்பிடம், மிடில் ஸ்டம்பிற்கு ஸ்பின் ஆகும் படி டோனி கூற அதே போன்று குல்தீப் வீச, அப்போது அந்த நியூசிலாந்து வீரர் ரோகித்சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்