இந்திய அணியின் தலைவரான கோஹ்லி சக வீரர்களிடம் கை கொடுப்பது போன்ற புகைப்படத்தை WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய அது சமூகவலைத்தளங்களில் வேறு மாதிரி பரவி வருகிறது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பட்டையை கிளப்பி வருகிறது.
லீக் தொடரில் ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் உலகரசிகர்களால் அதிகம் விரும்பப்படும், அதிக ரசிகர்களை கொண்ட WWE சூப்பர் ஸ்டார் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் கோஹ்லி, யாருக்கோ கை கொடுப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு சிலர் ஜான் சீனா மறைமுகமாக இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதை விரும்புவதன் காரணமாகவே இப்படி ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். இன்னொருத்துவரோ ஜான்சீனாவுக்கு கோஹ்லி கை கொடுக்கும் புகைப்படம், அரிய வகை புகைப்படம் இது என கிண்டல் செய்யும் விதமாக பதிவேற்றம் செய்துள்ளார்.
இது அப்படியே சமூகவலைத்தளங்களில் ஜான்சீனாவுக்கு, கை கொடுக்கும் கோஹ்லி என வைரலாகி வருகிறது.