ஒரு ஓவரில் தப்பிய பும்ரா... உலகக்கோப்பை தொடரில் அதிக மெய்டன் வீசிய டாப் 5 பவுலர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
265Shares

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பும்ரா மற்றும் இங்கிலாந்தின் ஆர்ச்சர் ஆகியோர் அதிக மெய்டன் ஓவர் வீசி அசத்தியுள்ளனர்.

கடந்த மே மாதம் இங்கிலாந்தில் துவங்கிய உலகக்கோப்பை தொடர் தற்போது அரையிறுதிப் போட்டியை நெருங்கியுள்ளது.

இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் மழை பெயததால், ஆட்டம் பாதிக்கப்படு, இன்று நேற்று போட்டி எதிலிருந்து முடிந்ததோ, அதிலிருந்து துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த நாட்டு வீரர்கள் அதிக மெய்டன் வீசியுள்ளனர் என்பது குறித்து வெளியாகியுள்ளது.

அதில் இந்திய அணியின் யார்க்கர் மன்னன் என்றழைக்கப்படும், ஜஸ்பிரிட் பும்ரா 9 ஓவர்கள் மெய்டனாக வீசி அசத்தியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் 8 ஓவரும், அவுஸ்திரேலியாவின் கம்மின்ஸ் மற்றும் வோக்ஸ் 6 ஓவரும், பாகிஸ்தானின் அமிர் 5, தென் ஆப்பிரிக்காவின் மோரிஸ் 5 மற்றும் அவுஸ்திரேலியாவின் ஸ்டார்க் ஆகியோர் 5 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளனர்.

வெளிநாட்டில் நடைபெறும் ஒரு ஐசிசி தொடரில் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் அற்புதமாக பந்து வீசி அசத்தியிருப்பதால், பும்ராவுக்கு வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்