உலக்கோப்பை தொடரில் தோற்றதால் வங்கதேச பயிற்சியாளர் நீக்கம்.. இலங்கை தொடரில் பயிற்சியாளர் யார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்
109Shares

உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி வெளியேறிய நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ரோட்ஸ்சை நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் வங்காளதேச அணி லீக் சுற்றில் 9 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 8–வது இடத்தை பெற்றது.

அந்த அணி பல போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் தோல்வியடைந்தது.

இதனால் வங்காளதேச அணி லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ரோட்ஸ்சை (இங்கிலாந்து) வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ஒப்பந்த காலம் வரை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்சை நீட்டிக்க நாங்கள் விரும்பவில்லை. நீக்க முடிவு செய்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர் கவுரவமாக விலகி கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

இந்த மாதம் இறுதியில் நடைபெறும் இலங்கை பயணத்துக்கான வங்காளதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்