இன்றும்...! இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி நடப்பதில் சிக்கல்

Report Print Basu in கிரிக்கெட்
632Shares

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நேற்று மழை குறுக்கிட போட்டி இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மான்செஸ்டரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது. 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு தொடர்ந்து பொழிந்ததால், போட்டி இன்று ஜூலை 10ம் தேதி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இன்று ஜூலை 10ம் தேதி புதன்கிழமைக்கான வானிலை முன்னறிவிப்பு மிகவும் நம்பிக்கைக்குரியதாக இல்லை. புதன்கிழமை, வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் இருக்கும், சில நேரங்களில் மேலும் பலத்த மழை பெய்யும். மழைக்கு இடையில் சில பிரகாசமான இடைவெளிகள் சாத்தியமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ் நாளில், வானிலை அனுமதிக்கும் பட்சத்தில், நியூசிலாந்து முதலில் மீதம் உள்ள ஓவர் இன்னிங்ஸை நிறைவு செய்யும், பின்னர் இந்தியா 50 ஓவர் இன்னிங்ஸை நிறைவு செய்யும், நிபந்தனைகளைப் பொறுத்து போட்டி சுருக்கப்படலாம்.

போட்டி முடிவடைய, இந்தியா குறைந்தது 20 ஓவர்களுக்கு துடுப்பாட வேண்டும். டக்வொர்த் லூயிஸ் முறை செயல்பாட்டுக்கு வந்தால், ஓவர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கு திருத்தப்பட்ட ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும். புதன்கிழமை ஆட்டத்தை முடிக்க முடியாத நிலையில், ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், லீக் சுற்றில் நியூசிலாந்தை (11) விட அதிக புள்ளிகள் (15) அடிப்படையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அதே சமயம், இன்று அரையிறுதி நடைபெறும் மான்செஸ்டரில் மழைக்கு வாய்ப்பு இல்லை, போட்டி 50 ஓவர் இன்னிங்ஸை நிறைவு செய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்