மழையால் மாற்றியமைக்கப்பட்டது இந்தியா - நியூசிலாந்து போட்டி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி மழை காரணமாக நாளைய திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உலகக்கிண்ணம் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டியானது இன்று மான்செஸ்டரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

மழை நின்றதும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டத்தை துவங்கலாம் என நடுவர்கள் காத்திருந்தனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், இன்றைய ஆட்டம் நிறுத்தப்படுவதாகவும், அதன் மீதமுள்ள ஆட்டம் நாளை நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்