இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ராவின் பந்துவீச்சை, அணியின் கேப்டன் விராட்கோஹ்லி கேலி செய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மான்செஸ்டரில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மழையின் காரணமாக நிறுத்தப்பட்டிருக்கும் போட்டியில், 46.1 ஓவர்கள் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 211 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி, நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீசும் விதத்தை கேலி செய்யும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
There is nothing that Virat Kohli can't do!😂 #INDvNZ
— Abhishek Mishra (@Abhi_m_official) July 9, 2019
(I don't own the credits for video)🙏 pic.twitter.com/Xi5Hhq9nPf