கைக்கு வந்த கேட்சை கோட்டை விட்ட டோனி... அப்செட்டான கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கைக்கு வந்த கேட்சை டோனி விட்டதால், கோஹ்லி சற்று கோபப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், கானே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடி வருகின்றன.

இதில் சற்றும் முன் வரை நியூசிலாந்து அணி 38.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் எப்போதும் துல்லியமாக கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் செய்யும் டோனி, இன்றைய போட்டியில் பும்ரா வீசிய ஓவரின் போது, அதை எதிர் கொண்ட டெய்லர் தடுத்து ஆட முற்பட ஆனால் பந்தானது பேட்டில் பட்டு டோனியின் கைக்கு சென்றது.

ஆனால் டோனி கைக்கு வந்த கேட்சை விட, இதைக் கண்ட கோஹ்லி மற்றும் சக வீரர்கள் அப்செட்டான புகைப்படம் வெளியாகியுளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers