மான்செஸ்டரில் வரலாற்று உலக சாதனைகளை குவிக்கும் டோனி.. சத்தமில்லாமல் சாதித்த தல

Report Print Basu in கிரிக்கெட்

மான்செஸ்டர் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடுவதின் மூலம் டோனி பல வரலாற்று உலக சாதனைகளை படைக்க உள்ளார்.

இந்தியாவின் மகேந்திர சிங் டோனி, கீப்பராக தொடர்ச்சியாக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை படைக்க உள்ளார். இலங்கையின் சங்கக்காரர் 360 ஒருநாள் போட்டிகளில் கீப்பராக விளையாடியுள்ளார், ஆனால் அவை தொடர்ச்சியாக இல்லை. அவர் ஒரு சிறப்பு துடுப்பாட்டகாரராகவும் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதே சமயம், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைக்கிறார் டோனி.

இதுவரை 349 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள டோனி, அதில், 346 போட்டிகளில் இந்தியாவிற்காகவும், 3 போட்டிகள் ஆசியா XI அணிக்காகவும் விளையாடி உள்ளார். இதன் மூலம் உலகளவில் 350 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் 10வது வீரர் என்ற சாதனையும் டோனி படைக்க உள்ளார்.

அதிக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (463) முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, ஜெயவர்தன (448), ஜெயசூர்யா (445), குமார் சங்கக்கார (404), ஷாஹித் அஃப்ரிடி (398), இன்சமாம்-உல்-ஹக் (378), ரிக்கி பாண்டிங் (375), வாசிம் அக்ரம் (356), முத்தையா முரளிதரன் (350). உள்ளனர்.

டோனி 349 ஒருநாள் போட்டிகளில் 200 போட்டிகளில் அணித்தலைவராக இருந்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் ஆவார் மற்றும் அவ்வாறு செயல்பட்ட ஒரே இந்தியர் வீரராகவும் டோனி உருவெடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்