2019 உலகக்கோப்பை லீக் சுற்றில் அதிக ஓட்டங்கள் மற்றும் விக்கெட்டுகள்! முதலிடத்தில் யார்?

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிவில், அதிக ஓட்டங்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் குறித்து காண்போம்.

நடப்பு தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அரையிறுதியில் அவுஸ்திரேலியா-இங்கிலாந்து, இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த மே மாதம் தொடங்கிய இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பெரிதும் சொதப்பின.

இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் 15 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அவுஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்ததால் 2வது இடத்திற்கு இறங்கியது.

லீக் சுற்று முடிவில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள்
  • ரோஹித் ஷர்மா (இந்தியா) - 647 ஓட்டங்கள் [5 சதங்கள், ஒரு அரைசதம்]
  • டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) - 638 ஓட்டங்கள் [3 சதங்கள், 3 அரைசதங்கள்]
  • ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 606 ஓட்டங்கள் [2 சதங்கள், 5 அரைசதங்கள்]
  • ஆரோன் ஃபிஞ்ச் (அவுஸ்திரேலியா) - 507 ஓட்டங்கள் [2 சதங்கள், 3 அரைசதங்கள்]
  • ஜோ ரூட் (இங்கிலாந்து) - 500 ஓட்டங்கள் [2 சதங்கள், 3 அரைசதங்கள்]
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
  • மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) - 26 விக்கெட்டுகள் [9 போட்டிகள்]
  • முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்) - 20 விக்கெட்டுகள் [8 போட்டிகள்]
  • பெர்குசன் (நியூசிலாந்து) - 17 விக்கெட்டுகள் [7 போட்டிகள்]
  • ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா) - 17 விக்கெட்டுகள் [8 போட்டிகள்]
  • முகமது அமிர் (பாகிஸ்தான்) - 17 விக்கெட்டுகள் [8 போட்டிகள்]

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers