நாங்கள் வெற்றி பெற்று இந்திய அணிக்கு நன்மை செய்திருக்கிறோம்! தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளிசிஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவை நாங்கள் வீழ்த்தியதால் இந்தியா மகிழ்ச்சி அடைந்திருக்கும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் பாப் டூ பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி தனது கடைசி உலகக்கோப்பை லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால் வலுவான இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் இந்திய அணி அரையிறுதியில் சந்திக்கும் நிலை உண்டாகியிருக்கும்.

ஏற்கனவே, இங்கிலாந்திடம் லீக் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணி கடந்த 6ஆம் திகதி அவுஸ்திரேலியாவை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன்மூலம், நியூசிலாந்தை அணியை அரையிறுதியில் இந்திய அணி எதிர்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக இந்த இரு அணிகளும் லீக் போட்டியில் சந்தித்துக் கொள்ளாததால், இந்தப் போட்டியை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பாப் டூ பிளிசிஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘நாங்கள் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், நியூசிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers