தொடர் சதத்தால் அசரடிக்கும் ரோஹித் சர்மா! கோஹ்லியை முந்துவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

2019 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு அவரும் ரோஹித் சர்மா, ஐசிசி ஒருநாள் போட்டிகள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பேட்ஸ்மேன்கள் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா தான்.

இந்த நிலையில், ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோஹ்லிக்கு அடுத்த இடத்தில், மிக நெருக்கமாக இருக்கிறார்.

உலகக்கோப்பை தொடரில் கோஹ்லி 442 ரன்கள் குவித்துள்ளார், அவரது சராசரி 63.14 ஆகும்.

ரோஹித் சர்மா 647 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஐந்து சதங்கள் அடங்கும்.

ஐசிசி ஒருநாள் போட்டிகள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை உலகக்கோப்பை லீக் சுற்றின் முடிவில் வெளியிடப்பட்டது.

இதில் கோஹ்லி தன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். அவர் 891 புள்ளிகள் பெற்று இருந்தார். உலகக்கோப்பை தொடரின் செயல்பாடுகளால், கோஹ்லி 1 புள்ளி கூடுதலாக பெற்றார்.

ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடரில் குவித்த ரன்கள் காரணமாக ஆறு புள்ளிகள் கூடுதலாக பெற்றார்.

அதன் மூலம் 885 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். கோஹ்லிக்கும் ரோஹித்துக்குமான இடைவெளி வெறும் ஆறு புள்ளிகளாக சுருங்கி உள்ளது.

ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடருக்குப் பின்னும் இதே பார்மில் நீடித்து ரன் குவிக்கும் பட்சத்தில் கோஹ்லியை முந்தி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers