ரோகித்துக்கு பயமே இல்ல..! இலங்கை வீரர்கள் அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்: திமுத் வலியுறுத்தல்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தனது துடுப்பாட்டகாரர்களை இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவைப் பார்த்து கற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. போட்டி முடிந்த பிறகு பேசிய இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்னே கூறியதாவது, இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ரோகித் சர்மா இருந்தார்.

அவர் பேட்டிங் செய்ய ஆரம்பிக்கும் போதே சதம் அடிக்க வேண்டும் என்ற ஆவலில் ஆடுவது போல் இருகின்றது.அவரின் ஆட்டத்தில் எந்த ஒரு பதற்றமும் இல்லை. யார் பந்தை அடிக்க வேண்டும், யார் பந்தை நிதானமாக ஆட வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

அவரது திட்டம் எளிது, அவர் தொடர்ந்த துடுப்பாடவே விரும்பினார். அதைத்தான் நான் இளைஞர்களிடமிருந்து எதிர்பார்கிறேன். இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்திய அணியின் பெரும் பலமாக இருக்கின்றது.

அவரின் மன உறுதியையும், அவரின் துடுப்பாடும் திறமையை நாம் கற்றுக் கொண்டால் தான் நம் அணிக்கு நல்லது. ரோகித் சர்மா போன்ற வீரரைப் பாராட்டுவதில் எந்த தவறும் இருக்காது. இலங்கை அணி வீரர்கள் ரோகித் சர்மாவைப் பார்த்து துடுப்பாட கற்றுக் கொள்ள வேண்டும் என திமுத் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...