நாங்கள் எந்த அணியையும் வெல்வோம்! விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் எதிரணி குறித்து எந்தவித கவலையும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

உலக்கோப்பை தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.

15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, 7 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வி என வலுவான நிலையில் உள்ளது.

இந்நிலையில், அரையிறுதியில் விளையாடுவது குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘அரையிறுதியில் யார் எதிரணி என்பதில் ஒரு விடயமும் இல்லை. புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் எதிரணி குறித்து எந்த வித கவலையும் இல்லை. நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் எந்த அணியிடமும் தோற்போம்.

சரியாக விளையாடினால் எந்த அணியையும் வெல்வோம். அதனால் நாங்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதிலேயே கவனத்தை செலுத்துவோம். எங்கள் வழியில் சென்று நாங்கள் ஒரு நல்ல முடிவை அடைவோம்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers