மான்செஸ்டரில் நேற்று நடந்த போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸை, தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி காக் அபாரமாக ரன்-அவுட் செய்தார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தனது கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மான்செஸ்டரில் நேற்று நடந்த இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, வார்னர் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது தென் ஆப்பிரிக்க வீரர் வேகமாக செயல்பட்டு, ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார்.
அதனை விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக் பார்க்காமலேயே அபாரமாக ரன்-அவுட் செய்தார். இதன்மூலம் மறுமுனையில் இருந்து ஓடிவந்த ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது.
இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.