கிறில் கெய்லின் ஓய்வு கிரிக்கெட் உலகின் சோகமான நாள்! சக அணி வீரர் உருக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் நாள், உலக கிரிக்கெட்டின் மிகவும் சோகமான நாள் என்று சக அணி வீரர் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல். சிக்சர்களை சாதாரணமாக பறக்க விடும் இவரை ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகினர் செல்லமாக அழைப்பார்கள்.

ஆனால், நடப்பு உலகக்கோப்பை தொடரில் கெய்ல் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அரையிறுதிக்கும் முன்னேறவில்லை.

தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின்னர் சக வீரர்கள் அவருக்கு சிறப்பான வகையில் மரியாதை அளித்தனர்.

AFP

வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவுடனான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாட உள்ள நிலையில், இந்தத் தொடருடன் கெய்ல் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கிறிஸ் கெய்லின் ஓய்வு குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷாய் ஹோப் கூறுகையில், ‘கிறிஸ் கெய்ல் கிரிக்கெட்டை விட்டு செல்லும்போது ஒட்டுமொத்த உலகமும் அவரை தவறவிடும். கிரிக்கெட்டிற்கு அது சோகமான நாளாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்