பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது... அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் இது தான்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்ததால், அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் குறித்து உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், கடைசியாக ஒரு அணி அரையிறுதிக்குள் நுழையப்போவது பாகிஸ்தானா? நியூசிலாந்தா? என்ற போட்டி நிலவியது.

இன்றைய போட்டியில் வங்கதேசம் அணியை, பாகிஸ்தான் அதிக அளவில் ரன் அடித்து வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இதனால் வங்கதேச அணியை, பாகிஸ்தான் 7 ஓட்டங்களுக்குள் சுருட்ட வேண்டும், ஆனால் வங்கதேச அணியோ 2.5 ஓவரிலே 9 ஓட்டங்கள் எடுத்துவிட்டதால், பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. இதன் மூலம் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் முதல் அரையிறுதிப் போட்டி 9-ஆம் திகதியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 11-ஆம் திகதியும் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers