அவர் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள இதுதான் சரியான நேரம்! வாசிம் அக்ரம் கூறியது யாரை தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் சோயிப் மாலிக்கை சிறப்பாக வழியனுப்புவோம் என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில், அனுபவ வீரர் சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 1999ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான மாலிக்கிற்கு இந்த தொடர் சிறப்பாக அமையவில்லை.

குறிப்பாக, இரண்டு போட்டிகளில் அவர் டக்-அவுட் ஆனார். ஏற்கனவே அவர் இந்த தொடருடன் ஓய்வு பெற போவதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில், மாலிக்கை சிறப்பாக வழியனுப்புவோம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வு பெறப் போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், இந்த தொடர் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள சரியான நேரம் என்றே நினைக்கிறேன்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அவர் நிறையவே செய்திருக்கிறார். இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. இரண்டு முறை அவர் டக்-அவுட் ஆனார். இது எந்த வீரருக்கும் இதுபோல் நடப்பது வழக்கம். அவர் நிறைய செய்திருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது.

அவர் ஒரு சிறப்பான மனிதர். அவரை சிறப்பாக வழியனுப்புவோம். அவரால் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட முடியவில்லை என்பது எனக்கு தெரியும். பாகிஸ்தான் அணிக்காக சிறந்த பங்களிப்பு ஆற்றியுள்ள சோயிப் மாலிக்கிற்கு ஒரு Farewell Party எடுப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...