உலககோப்பை அரையிறுதியில் டோனி விளையாடுவாரா? அணி நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனியின் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் குறித்த தகவலை அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பட்டையை கிளப்பி வருகிறது.

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, அதற்கு முன் லீக் தொடரின் கடைசி ஆட்டமாக இலங்கையுடன் நாளை மோதுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் டோனிக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்ட நிலையில், அடுத்த வங்கதேச போட்டியில் விளையாடினர்.

போட்டிக்கிடையே அவ்வபோது கீப்பிங் பொறுப்பை ரிஷப் பண்ட்டிடம் கொடுத்துவிட்டு டிரெஸ்ஸிங் ரூமிற்குள் அடிக்கடி டோனி சென்று வந்தார்.

தற்போது இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் அரையிறுதியிலும் டோனி ஆடுவாரா? அவரது காயம் என் நிலையில் உள்ளது? என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையடுத்து அணி நிர்வாகம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சுமார் 300 ஒருநாள் போட்டிகளுக்கும் மேல் ஆடியுள்ள டோனி வருகின்ற போட்டிகளில் எப்படி செயல்பட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்.

காயங்களையும் வலிகளையும் அவர் சற்றும் பொருட்படுத்தவில்லை. இருப்பினும் அவரது காயம் நன்கு குணமடைந்து இருக்கிறது. அடுத்த போட்டிகளில் ஆட நிர்வாகம் சம்மதித்துள்ளது. ஆனால், டோனியின் முடிவு இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன் டோனி தன்னுடைய பேட்டியில், என்னால் 100% குணமடையும் வரை காத்திருக்க முடியும், அது ஒருநாளோ? அல்லது 5 வருடமோ? அந்த பொறுமை என்னிடம் உள்ளது. என்னால் அதனை செய்யவும் முடியும். ஆனால், முழு உடல்தகுதி இல்லாமல் களமிறங்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.

தற்போது குணமடையும் முன்பே அடுத்தடுத்த போட்டியில் டோனியை நிர்வாகம் ஆடுவதற்கு பணித்தாலும், அவரின் உடல்நிலை பொறுத்து அவரே முடிவெடுப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers