பலத்த எதிர்பார்ப்பான போட்டி.. பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான்! கேப்டன்களின் கருத்து என்ன?

Report Print Kabilan in கிரிக்கெட்

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை துவங்கியுள்ளது.

பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதலில் துடுப்பாட்டம் செய்து, மிகப்பெரிய ஓட்டங்களை குவித்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது.

எதிர்பார்த்தது போலவே அணித்தலைவர் சர்பிராஸ் அகமது துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன் பின்னர் பேசிய அவர் கூறுகையில்,

‘ஒரே ஒரு வாய்ப்பு பெரிய அளவில் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும். மார்ஜின் மிகப்பெரியது என்பதை நாங்கள் அறிவோம். அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்வி கடும் ஏமாற்றமளிக்கிறது. ஆனால், போட்டித் தொடரை வெற்றியுடன் முடிக்க விரும்புகிறோம்’ என தெரிவித்தார்.

அதேபோல் வங்கதேச அணியின் மூத்த வீரர் கூறுகையில், ‘ஆம், நாங்கள் வெளியேறி விட்டோம். ஆனால் இதுவும் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டி. ஆகவே நாங்களும் வெற்றியுடன் முடிக்கவே விரும்புகிறோம்.

சில வேளைகளில் பீல்டிங் எங்களை கவிழ்த்தது. மற்றபடி நன்றாகவே ஆடினோம். துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் என்னுடைய பங்களிப்பு குறித்து எனக்கு பெருமையாக உள்ளது. இந்த மைதானத்தில் நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் ஆடியதில்லை, எனவே இது ஒரு உற்சாகமான தருணமே’ என தெரிவித்தார்.

தற்போது வரை பாகிஸ்தான் அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers