வங்கதேச கேப்டனின் திடீர் ஓய்வு அறிவிப்பு.. பின் வாங்கியது ஏன்? பயிற்சியாளர் விளக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

வங்கதேச கேப்டன் மோர்தசா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்வாங்கியது குறித்து, அணியின் பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, வங்கதேச அணி கேப்டன் மஷ்ரஃபி மோர்தசா அறிவித்திருந்தார். அதன் பின்னர் தனது முடிவில் இருந்து அவர் பின் வாங்கினார்.

மூத்த வீரர்களான தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், மக்மத்துல்லா ஆகியோருடன் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்ட பின்னரே அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கியதாக கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில், மோர்தசாவின் நிலைபாடு குறித்து வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

AFP

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘மஷ்ரஃபி மோர்தசா வங்கதேச அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவரை நான் போராளி என்று தான் அழைப்பேன். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியின் போதும் தனது அணிக்காக போராட தயாராவார். இதனால் சக அணி வீரர்களும் ஈர்க்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த அணியின் மரியாதையையும் பெற்றவர். இதுதான் அவரின் கடைசி உலகக்கோப்பை, இதனால் அவருக்கு இது கடினமான காலகட்டம். ஒவ்வொரு கிரிக்கெட் அணியைப் போன்று வங்கதேச கிரிக்கெட் அணியும் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க வேண்டியுள்ளது.

Dhaka Tribune/Md Manik

இதனால் எந்த ஒரு காலகட்டத்திலும், மஷ்ரஃபி போன்ற ஒரு வீரர் இன்றி வங்கதேச கிரிக்கெட் அடுத்த கட்டத்துக்கு கடந்து செல்ல வேண்டியது அவசியம். ஏனென்றால் மஷ்ரஃபி மோர்தசா விட்டுச் செல்லும் வெற்றிடம் மிகப்பெரியது. ஓய்வு பெறுவது குறித்து ஒரு தனிப்பட்ட வீரர் தான் தீர்மானிக்க வேண்டும்.

அதில் எந்த நிர்பந்தமும், அழுத்தமும் ஏற்படக் கூடாது. எனவே கிரிக்கெட் வாரியத்துடன் பேசி மஷ்ரஃபி தான் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏற்கனவே பல விமர்சனங்களை சந்தித்துள்ளதால் அவருடைய இந்த முடிவு அணியை எந்த வகையிலும் பாதிக்காது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers