டோனி அடிக்கடி பேட்டை மாற்றி விளையாடுவது ஏன்? மேலாளர் சொன்ன ரகசியம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி ஏன் தனது பேட்டை மாற்றி விளையாடி வருகிறார் என்பதை அவரின் மேலாளர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 -ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரோடு டோனி ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த தொடரில் பிசிசிஐயின் மூத்த நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடனம் இந்தியா இந்த தொடரில் விளையாடும் கடைசி போட்டியே டோனியின் கடைசி போட்டி என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் டோனி சமீபகாலமாகவே தன்னுடைய பேட்டை மாற்றி விளையாடி வருகிறார்.

இதனால் இது குறித்து டோனியின் மேலாளர் கூறுகையில், தனது வாழ்க்கையில் பல்வேறு நிலைகளை கடந்து வந்த போது, தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு உதவும் விதமாக அவர்களது நிறுவனங்களின் லோகோவை டோனி பேட்டில் பயன்படுத்தி வருகிறார்.

அதற்காக டோனி அவர்களிடம் பணம் கேட்பதில்லை. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு போட்டியில் பேட்டை மாற்றி விளையாடி வருகிறார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers