உலககோப்பை போட்டியில் நிர்வாணமாக மைதானத்திற்கு நுழைந்த நபர்... ஒதுங்கி ஓடிய வீரர்களின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தின் போது, ரசிகர் ஒருவர் நிர்வாணமாக மைதானத்தில் நுழைந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று நியூசிலாந்து அணி 34-வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று நிர்வாணமாக உள்ளே நுழைந்த நபர், மைதானத்தின் பேட்ஸ்மேன்கள் விளையாடும் மையப் பகுதிக்கு வந்து ஆடினார்.

அப்போது இதைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதன் பின் அந்த நபர் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டான்.

ஆனால் அந்த நபர் எதற்காக இப்படி வந்தான் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்