லண்டன் பாட்டிக்கு கோஹ்லி கொடுத்த வாக்குறுதி... இப்படியும் ஒரு அதிர்ஷம் கிடைக்குமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய போட்டியை பார்க்க வந்த பாட்டியிடம் கோஹ்லி என்ன பேசினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உலககோப்பை தொடர் இங்கிலாந்தில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது பிர்மிங்காம் மைதானத்திற்கு வந்த 87 வயது சாருலதா போட்டி, இந்திய வீரர்கள் அடித்த ஒவ்வொரு பவுண்டரி மற்றும் விக்கெட்டிற்கு உவுசலாவை உற்சாகமாக ஊதியபடி வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

அவரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் போட்டி முடிவதற்குள்ளே சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அவரை கோஹ்லி மற்றும் ரோகித்சர்மா மைதானத்திலே அவரை சந்தித்து பேசினர்.

அப்போது அவரிடம் கோஹ்லி, அடுத்து வரும் போட்டிகளையும் நீங்கள் காண வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் பாட்டியே என்னிடம் டிக்கெட் வாங்குவதற்கான பணம் இல்லை என்று கூற, உடனே கோஹ்லி அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீங்க, டிக்கெட் உங்களை தேடி வரும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இதன் மூலம் அடுத்து இந்தியா விளையாடும் போட்டிகளால் சாருலதா பாட்டியை நாம் பார்க்கலாம், சாருலதா லண்டனில் வசித்து வருகிறார். இவர் அங்கிருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரம் பயணித்து போடியை காண பிரிமிங்ஹாமிற்கு வந்துள்ளார்.

இதற்கிடையில் உலகக்கோப்பை தொடரில் இந்தியா அடுத்தடுத்து விளையாடும் போட்டிகளுக்கு தானே டிக்கெட்டுகளை வழங்க விரும்புவதாக மகிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ராவும் டுவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்