உலகக்கோப்பையில் சச்சின் சொன்னது அப்படியே நடந்துவிட்டது... என்ன தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிப் போடிக்கு தகுதி பெறும் என்று தொடர் துவங்குவதற்கு முன்பே சச்சின் கணித்திருந்த கணிப்பு தற்போது சரியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பு இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இந்த அணிகளுக்குள் தான் அரையிறுதி நடக்கும் என்று முன்னணி வீரர்கள் பலர் கணித்திருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் ஆப்பிரிக்கா லீக்கோடு வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் அது வரும் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும்.

அப்படி இருந்தால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.

இந்நிலையில் தொடர் துவங்குவதற்கு முன்பு கிரிக்கெட்டின் கடவுள் என்று கூறப்படும் சச்சினிடம் எந்தெந்த அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று பிரபல ஆங்கில ஊடகம் பேட்டி எடுத்தது.

அப்போது சச்சின் எதுவும் குத்து மதிப்பாக செல்லாமல், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா கண்டிப்பாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும், மற்றொரு அணியாக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணி முன்னேறும் என்று கூறினார்.

தற்போது அவர் கூறியது போன்றே, இந்த அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் போராடி வருகின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்