எப்போதும் மற்றவர்களையே நம்பி இருக்காதீர்கள்! பாகிஸ்தான் அணி மீது கோபத்தில் ரசிகர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பையில் தொடரில் அரையிறுதிக்குள் நுழைவதற்கு எப்போதும் மற்றவர்களையே நம்பியிருக்காதீர்கள் என்று பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. பலம் வாய்ந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. ஆனால், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது.

அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் அணிக்கு ரன் ரேட் மிகவும் முக்கியம் ஆகும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வியடைந்ததால், பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதியில் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, கிட்டத்தட்ட தொடரை விட்டே வெளியேறிய நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் மிக அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சாத்தியம்.

AP Photo

நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தால், பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றதால் அந்த வாய்ப்பு பறிபோனது. இதனை வைத்து மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என அந்நாட்டு ரசிகர்கள் கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்றவர்களை நம்பி இருக்காதீர்கள், சொந்த பலத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுங்கள் என்று ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் அணியை சாடி வருகின்றனர். அத்துடன் தோல்வியடைந்து விட்டு, இவ்வாறு மற்ற அணிகளை நம்பி இருப்பது சரியா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்