உலகிலேயே சிறந்த ஒருநாள் போட்டி வீரர் அவர் தான்! கோஹ்லி பாராட்டியது யாரை தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

ரோஹித் ஷர்மா தான் உலகிலேயே சிறந்த ஒருநாள் போட்டி வீரர் என்று, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா அபார சதம் விளாசினார். அத்துடன் நடப்பு தொடரில் 4 சதங்களை அவர் விளாசியுள்ளார். அவரது சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக நான் ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தை கவனித்து வருகிறேன். என்னுடைய பார்வையில், உலகிலேயே தலை சிறந்த ஒருநாள் போட்டி வீரர் ரோஹித் ஷர்மா தான்.

AFP

அவர் நன்றாக விளையாடும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் கண்டிப்பாக உயரும். தற்போது அவரின் ஆட்டம் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. மேலும் அவரின் ஆட்டம் மற்ற வீரர்கள் முக்கிய ஊக்கமாக அமைகிறது. கடந்த போட்டியில் வங்கதேச அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.

இந்தப் போட்டியில் அவர்களின் போராட்ட குணம் மிகவும் மேலோங்கி இருந்தது. இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers