உலகக் கோப்பை தொடரிலேயே சிறந்து பந்து இது தான்.. வைரலாகும் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரிலேயே சிறந்து பந்து அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசிய அற்புதமான யார்க்கர் பந்து என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றிப்பெற்றது.

இப்போட்டியில், இங்கிலாந்து அணி 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில், களமிறங்கிய ஸ்டோக்ஸ் நிதானமாக துடுப்பாடி அரைசதம் கடந்து ஓட்டங்கள் குவிப்பில் ஈடுபட்டார்.

அவர் 89 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசிய யார்க்கர் பந்தில் எதிர்பாராத விதமாக போல்டானார். மின்னல் வேகத்தில் வந்த பந்து, ஸ்டோக்ஸ் துடுப்பை வீசுவதற்குள் ஸ்டம்பை தாக்கியது.

ஏமாற்றமடைந்த ஸ்டோக்ஸ் துடுப்பை தரையில் வீசி, காலால் எட்டி உதைத்தார். இதைக்கண்ட இங்கிலாந்து வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமான ஸ்டார்கின் அற்புதமான யார்க்கர் பந்து, உலகக் கோப்பை தொடரின் சிறந்த பந்து என ரசிகர்களால் புகழப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers