குண்டு பன்றி என அழைத்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் அணித்தலைவர்

Report Print Basu in கிரிக்கெட்
198Shares

பொது வெளியில் குண்டு பன்றி என அழைத்த ரசிகருக்கு, பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பார்ஸ் அகமது பதிலடி கொடுத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் பரம எதிரியான இந்தியாவிடம், பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் ரசிகர்கள் அணித்தலைவர் சர்பார்ஸ் அகமது உட்பட அணி வீரர்களை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள மால் ஒன்றில் குழந்தையுடன் சென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பார்ஸ் அகமதை அழைத்த ரசிகர் ஒருவர், குண்டு பன்றி போல் இருக்கிறார் என தரைகுறைவாக பேசு அதை வீடியோ எடுத்து இணையத்தில வெளியிட்டார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இச்சம்பவம் குறித்து பேசிய சர்பார்ஸ் அகமது, இதுகுறித்து பேச ஒன்றுமில்லை. எங்களை குறித்து மக்கள் பேசுவதை கட்டுப்படுத்துவது எங்கள் கையில் இல்லை. வெற்றியோ, தோல்வியோ இரண்டுமே விளையாட்டின் ஒரு பகுதியாகும்.

இதுபோன்ற விமர்சனங்களை முந்தைய பாகிஸ்தான் அணிகளும் சந்தித்துள்ளது. இதுபோன்ற விமர்சனங்களால் நாங்கள் எத்தகைய அளவிற்கு பாதிக்கப்படுகிறோம் என்பதை மக்கள் அறிய வேண்டும்.

தற்போது சமூக ஊடகங்கள் இருக்கிறது. அதில் தங்களின் கருத்தை மக்கள் சுதந்திரமாக வெளியிடலாம். இந்த சம்பவங்கள் வீரர்களின் உளவியலை பாதிக்கின்றன.

எனவே, வீரர்கள் மீது தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வெறித்தனமான ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers