அணிக்கு திரும்பிய காயமடைந்த இந்திய வீரர்... பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ!

Report Print Abisha in கிரிக்கெட்

காயம் காரணமாக ஓய்வில் இருந்த வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், மீண்டும் பயிற்சிக்கு திரும்பி உள்ளார்.

இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் காயம் காரணமாக வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்திருந்தார். எனவே அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

மேலும், அவரது காயம் விரைவில் குணமடையும் என மருத்துவர்கள் கூறியதால், அணியுடன் புவனேஷ்வர் குமார் பயணிப்பார் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அவர் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதன்படி நாளை நடைபெற உள்ள இந்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு இடையிலான ஆட்டத்தில் புவனேஷ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers