இங்கிலாந்து-அவுஸ்திரேலியா போட்டி: இலங்கை ஜம்பவான் மஹேல ஆதரவு யாருக்கு தெரியுமா?

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் ஒன்றான இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இன்று லண்டனில் நடைபெற்று வருகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன் பந்து வீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து, அவுஸ்திரேலிய அணி களமிறங்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் ரசிகர்களுடன் ரசிகர்களாக இங்கிலாந்து-அவுஸ்திரேலியா போட்டியை கண்டு களித்து வரும் இலங்கை ஜம்பவான் மஹேல ஜெயவர்தன, குறித்த போட்டியில் தனது ஆதரவு யாருக்கு என்பதை தெரவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், லார்ட்ஸ் மைதானத்தில் போட்டியை கண்டுகளிக்கும் வீடியோ உடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிக முக்கியமான போட்டி இது. ரசிகர்கள் கூட்டத்தில் இருப்பது மகிழச்சியாக இருக்கிறது, நடுநிலையாக போட்டியை கண்டுகளிக்கின்றேன். யார் வெல்வார்கள் என்று நினைக்கிறீர்கள், என்ற கேள்வியுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers