இந்தியாவை வீழ்த்துவது தான் இலக்கு... அது முடியாத காரியமல்ல! சூளுரைத்த வங்கதேச வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் இந்திய அணியை வீழ்த்துவது தான் இலக்கு என வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் நேற்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 புள்ளிகள் பெற்று, ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அரையிறுதிக்கான ரேஸில் உள்ள அணிகளில், நான்காவது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு (8 புள்ளிகள்) பின் வங்கதேச அணியின் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளது.

இதுகுறித்து ஷாகிப் அல் ஹாசன் கூறுகையில், இந்திய அணி ‘டாப்’ அணிகளில் ஒன்று. கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று இந்திய அணி. அதனால் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் அது முடியாத காரியமும் இல்லை. அனுபவம் இருந்தால் எதுவும் சாத்தியம் தான்.

இன்னும் இரண்டு மிகப்பெரிய சவால்கள் உள்ளது. ஆனால் அதில் முதலில் இந்திய அணியை வீழ்த்துவது தான் இலக்கு என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers