கஷ்டமாக இருக்கிறது..! நாடு திரும்பும் தவான் வெளியிட்ட உருக வைக்கும் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் உலகக்கோப்பையில் இருந்து முழுவதுமாக விலகிய நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகக் கோப்பையில் இருந்து முழுமையாக விலகிய தவான், விரைவில் நாடு திரும்பவுள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இந்த உலகக் கோப்பையில் இனி ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்று அறிவிக்க கஷ்டமாக உணர்கிறேன்.

துரதிருஷ்டவசமாக என்னுடைய கட்டை விரல் சரியான நேரத்தில் குணமடையவில்லை. ஆனால், உலகக் கோப்பை தொடர்ந்து நடக்கும். எனது அணி வீரர்கள், கிரிக்கெட் பிரியர்கள் மற்றும் நமது ஒட்டுமொத்த தேசத்தின் அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஜெய் ஹிந்த்! என பதிவிட்டுள்ளார்.

மேலும், ரசிகர்களான நீங்கள் நமது அணிக்கு அளித்த ஆதரவை தொடர்நது அளியுங்கள். நமது வீரர்கள் உலகக் கோப்பை வெல்ல வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஷிகர் தவானுக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரரும், இடது கைது துடுப்பாட்டகாரருமான ரிஷாப் பண்ட் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்