அவுட் ஆயிடு.. கோஹ்லியிடம் கைகூப்பி கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்: வைரலாகும் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியின் போது இந்திய வீரர் கோஹ்லியிடம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் கைகூப்பி அவுட் ஆகுமாறு கெஞ்சிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தான் எதிரான போட்டியில் இந்தியா அணி 89 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றிப்பெற்றது. இதற்கு இந்திய அணித்தலைவர் கோஹ்லியும் ஒரு முக்கிய காரணம். இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.

ரோகித் சர்மாவின் சதம், கோஹ்லியின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையை எட்டியது. சிறப்பாக விளையாடி கோஹ்லி 65 பந்துகளில் 77 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

போட்டியின் முதல் இன்னிங்சின் போது பாகிஸ்தான் பந்து வீச்சாளர் இமாத் வாசிம், கைகூப்பி அவுட் ஆகுமாறு இந்திய அணித்தலைவர் கோஹ்லியிடம் கெஞ்சிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்