உலகக்கோப்பையில் இருந்து தவான் விலகல்! களமிறங்கும் இளம் அதிரடி வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் உலகக்கோப்பையில் இருந்து முழுவதுமாக விலகுவதாகவும், அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து மிரட்டிய தவான், காயம் காரணமாக அதற்கு அடுத்த போட்டிகளில் விலகினார்.

அவருக்கு 3 வாரங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, தவானுக்கு பதிலாக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது.

விக்கெட் கீப்பர்களான ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷாப் பண்ட் இருவரில் ஒருவர் களமிறங்கலாம் என செய்திகள் வெளியானது. அதன் பின்னர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக தவானுக்கு பதிலாக களமிறங்கி அரைசதம் விளாசினார்.

இந்நிலையில், காயம் குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகும் என்பதால், ஷிகர் தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்