இங்கிலாந்து அணியிடம் மரண அடி... தகராறில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணியுடன் மோசமான தோல்வியை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 71 பந்துகளில் 148 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 17 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பலம் வாய்ந்த அணியாக ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை தொடருக்கு வந்த நிலையில், இங்கிலாந்து அணி இப்படி ஒரு அடி கொடுத்ததால், அந்த வீரர்கள் போட்டி முடிந்த பின்னரும் சோகத்தில் இருந்தனர்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து தோல்வி... தோல்வி என ஐந்து தோல்விகளால் கடும் விரக்தியுடன் இங்கிலாந்து போட்டி முடிந்த பின்பு மான்செஸ்டரில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஹோட்டலில் இருந்த ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுக்க முற்பட்டதால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பெரிதாக மாறியதால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த பொலிசார் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவ தினத்தன்று மான்செஸ்டர் நகரில் லிவர்பூல் சாலையில் உள்ள அக்பர் ரெஸ்டாரன்டில் இரவு 11.15 மணி அளவில் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும், பொதுமக்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அங்கு சென்றோம்.

அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த தகராறில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, யாரையும் கைதுசெய்யவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers