புயல் வேகத்தில் ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட டெண்டுல்கர் மகனின் வீடியோ!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்துவீசிய வீடியோவை மைதான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆல்-ரவுண்டர் வீரராக வலம் வரும் அர்ஜூன், கடந்த ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தெரிவானார். இந்நிலையில் இங்கிலாந்தில் எம்.சி.சி அணியில் அர்ஜூன் விளையாடி வருகிறார்.

எம்.சி.சி அணிக்கும், சர்ரே அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், சர்ரே அணி வீரர் டெய்லியை(4) தனது அபார பந்துவீச்சால் அர்ஜூன் டெண்டுல்கர் போல்டாக்கினார்.

இதுதொடர்பான வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டியில் 50 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த அர்ஜூன், 2 மெய்டன் ஓவர்களுடன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்