உலகசாதனை படைத்த மோர்கனை ரன் அவுட்டாக்க நினைத்த ஆப்கானிஸ்தான் வீரர்! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இயான்மோர்கனை கிரிசிற்குள் விடாமல் ஆப்கானிஸ்தான் வீரர் குல்படின் நயீப் தெரியாதது போல் தடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மான்செஸ்டரில் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 397 ஓட்டங்கள் குவித்தது. இதில் இங்கிலாந்து அணியின் கேப்டர் இயான்மோர்கன் 71 பந்துகளில் 148 ஓட்டங்கள் குவித்தார்.

இதில் 17 சிக்ஸர்கள் பறக்கவிட்டு உலகசாதனை படைத்தார்.

இந்நிலையில் ஆட்டத்தின் 32-வது ஓவரின் போது இயான்மோர்கன் 1 ஓட்டம் எடுத்திருந்த நிலையில், குல்படின் நயீப்பின் பந்து வீச்சை எதிர்கொண்ட போது, பந்தானது அவரது பேட்டில் படாமல் உடலில் பட்டு சென்றது.

இதனால் ஓட்டம் எடுக்க முயன்ற போது, பீல்டர்கள் வந்ததால், மீண்டும் கிரிசிற்கு ஓடி வர மோர்கன் முயன்ற போது, பந்து வீச்சாளர் நயீப் தெரியாதது போல் அவரை கிரிசிற்குள் வரமுடியாத அளவிற்கு தடுக்கிறார்.

ஆனால் மோர்கன் தன்னுடைய பேட்டை கீழே போட்ட போதும், தன்னுடைய காலால் கிரிசை அடைந்தார். இதனால் ரன் அவுட்டிலிருந்து தப்பினார். இதைத் தொடர்ந்து நயீப் இப்படி நடந்து கொண்டதற்கு மோர்கனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்றும், அதன் பின்னரே மோர்கன் தன்னுடைய ருத்ரதாண்டவ ஆட்டத்தை காட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்