2019 உலகக்கோப்பையில் இதுதான் சிறந்த ரன்-அவுட்.. என்ன ஒரு துல்லியம்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் செய்த ரன்-அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-வங்கதேச அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 321 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி 41.3 ஓவரில் 322 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

முன்னதாக, வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 48 ஓட்டங்களில் இருக்கும்போது, வெஸ்ட் இண்டீஸின் காட்ரெல் அவருக்கு பந்துவீசினார்.

அவரது பந்தை இக்பால் பவுண்டரி அடிக்க முயன்றபோது, காட்ரெலின் கையில் சிக்கியது. உடனே மின்னல் வேகத்தில் ஸ்டம்பை நோக்கி அவர் எறிந்தார். தமிம் இக்பால் ஸ்டம்பை மறைத்துக் கொண்டு இருந்தபோதிலும், துல்லியமாக ஸ்டம்பை அவர் வீசிய பந்து தாக்கியது.

அதனைத் தொடர்ந்து, 3வது நடுவர் சோதித்தபோது அது ரன்-அவுட் என்பது தெரிய வந்தது. தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ரன்-அவுட் இதுதான் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்