இலங்கை திரும்பினார் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் இலங்கை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 11ம் திகதி கொழும்பில் உள்ள லசித் மலிங்காவின் மனைவியின் தயார் காந்தி பெரேதா காலமானார். அன்று நடக்கவிருந்த இலங்கை-வங்கதேச போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மலிங்கா இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டார்.

இதனையடுத்து, இங்கிலாந்து திரும்பிய மலிங்கா, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். எனினும், குறித்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில், மாலிங்கா மீண்டும் நாடு திரும்பியுள்ளார். மனைவியின் தயாரின் நினைவுகூர்தல் நிகழ்வுக்காகவே அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு திரும்பியுள்ள லசித் மாலிங்கா 19ம் திகதி மீண்டும் இங்கிலாந்துக்கு சென்று அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இவரால் அணியின் பயிற்சி மற்றும் அடுத்தப் போட்டிக்கான திட்டமிடல் சந்திப்பு என்பவற்றில் பங்குக்கொள்ள முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்