பாகிஸ்தான் போட்டியில் தமிழனை மறந்த சச்சின்... உச்ச கட்ட கோபத்தில் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் சிறப்பாக விளையாடிய நிலையில், அவரை பாராட்டாமல் மற்றவர்களை சச்சின் பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மான்செஸ்டரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் இந்திய அணிக்கு தற்போது வரை வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விரேத் கோஹ்லி, குல்தீப், ஹார்திக் பாண்டியா ஆகியோரை டேக் செய்து வாழ்த்து செய்தியை பதிவிட்டிருந்தார்.

தன்னுடைய முதல் உலகக்கோப்பை போட்டியின், முதல் பந்திலே விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த விஜய்சங்கரைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. இதனால் இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் நீங்கள் விஜய் சங்கரை மறந்துவிட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்