ஏமாற்றமே மிஞ்சியது.. வங்கதேசம்-இலங்கை ரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் இன்று வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதவிருந்த லீக் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிஸ்டல் மைதானத்தில் இன்று வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதும் போட்டி மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், பிரிஸ்டலில் தொடர்ந்து மழை பொழிந்து வந்ததால் நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டது.

எனினும், போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களும் மைதானத்தில் குவிந்தனர். மழை நின்றுவிடும், போட்டி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் இரு நாட்டு ரசிகர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.

மழை தொடர்ந்து பொழிந்தால் ஒரு பந்து கூட வீச படாத நிலையில், போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 4 போட்டிகளில் விளையாடிவுள்ள இலங்கை அணி 1 வெற்றி, 1 தோல்வி, 2 போட்டிகள் ரத்து என 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

4 போட்டிகள் விளையாடிவுள்ள வங்கதேச அணி, 1 வெற்றி, 2 தோல்வி, 1 போட்டி ரத்து என 3 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers