தவான் விலகல்... இந்தியாவின் இளம் நட்சத்திர வீரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் தவான் விலகியுள்ள நிலையில், இளம் வீரர் ரிஷப் பந்த் இங்கிலாந்து புறப்படவுள்ளார். அதே சமயம் கே.எல்.ராகுல் ஆரம்ப துடுப்பாட்டகாரராக களமிறங்கவுள்ளார்.

கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இடது கை துடுப்பாட்டகாரரான தவான், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு பதிலாக அணியில் யார் சேர்க்கப்படுவார் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடது கை துடுப்பாட்டகாரரான ரிஷப் பந்த இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர், அடுத்த 48 மணிநேரத்தில் இங்கிலாந்து புறப்படவுள்ளார். எனினும், அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என கூறப்படுகிறது.

அதற்கு பின் நடக்கும் போட்டியில் இந்திய அணியின் நடுவரிசையில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. அதே சமயம் தற்போது, நடுவரிசையில் களமிறங்கி விளையாடி வரும்கே.எல். ராகுல், ரோகித் சர்மாவுடன் ஆரம்ப வீரராக களமிறங்குவார் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers