வரலாற்று சாதனையை தக்க வைக்குமா இலங்கை? அனல் பறக்க போகும் இன்றைய போட்டி

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இதுவரை இலங்கையை ஒரு முறை கூட வங்கதேசம் வெல்லாத நிலையில் இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இலங்கை - வங்கதேச அணிகள் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

2003, 2007, 2015 என மூன்று முறை நடந்த மோதலிலும் இலங்கை அணியே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

வங்காளதேச அணியின் பேட்டிங்கில் ஷகிப் அல்-ஹசனை தவிர யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அந்த அணியின் பந்து வீச்சும் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

அதே போல இலங்கை அணியினர் ஒருங்கிணைந்த ஆட்டத்தை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆட முடியாதது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers