சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தீடீர் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்... ரசிகர்கள் கவலை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்துள்ளதாக அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களின் வரிசையில் எப்போதும் இருப்பவர் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் தான் முதன் முதலில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து மிகப் பெரிய சாதனை படைத்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக பார்மின்றி தவித்து வந்த யுவராஜ் சிங், இன்று திடீரென்று சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்