ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோஹ்லி!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 அரைசதங்கள் விளாசி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி, நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 316 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தப் போட்டியில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 77 பந்துகளில் 82 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 அரைசதங்கள் கடந்த 7வது இந்திய அணி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 229 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள கோஹ்லி, 41 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சச்சின் டெண்டுல்கர்(96), ராகுல் டிராவிட்(83), சவுரவ் கங்குலி(72), யுவ்ராஜ் சிங்(52), அசாருதீன்(58), டோனி(71) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்