அவுஸ்திரேலியாவை புரட்டியெடுத்த இந்தியா! வெற்றி கொண்டாட்ட தருணத்தின் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அந்த அழகிய தருணத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை லீக் சுற்றில் நேற்றைய போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது.

பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன்கள் எடுத்தது.

கடைசி பந்தை புவ்னேஷ்வர் வீசிய நிலையில் கேட்ச் கொடுத்து ஜம்பா கடைசி வீரராக அவுட்டானார்.

இதையடுத்து வெற்றி பெற்ற தருணத்தை இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் சக வீரர்கள் துள்ளிகுதித்து கொண்டாடினர்.

அதே போல மைதானத்தில் குவிந்திருந்த இந்திய ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்