டோனியின் கீப்பிங் கிளவுசில் அதை காணவில்லையே... சோகத்தில் ரசிகர்கள்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய டோனி தன்னுடைய க்ளவுசில் இருந்த இராணுவ முத்திரையை நீக்கியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதின, இப்போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த தொடரின் இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தபோது, டோனி பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, டோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியது. ஆனால் ரசிகர்கள் உட்பட சில முன்னாள் வீரர்கள் அதை நீக்க வேண்டாம் என்று கருத்து கூறி வந்தனர்.

இதையடுத்து நேற்றைய அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில், டோனி தனது கையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கியுள்ளார்.

முன்னதாக டோனிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, டோனி தனது கையுறையில் உள்ள அந்த முத்திரையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி–யின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. அதனால் டோனி , வேறு கையுறையை பயன்படுத்தி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் கண்ட இந்திய ரசிகர்கள் பலரும் அது எப்படி என்று சோகமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்