டோனி அடித்த சிக்ஸரை பார்த்து மிரண்டு போன விராட்கோஹ்லி: வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின்போது டோனி அடித்த சிக்ஸரை, இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி வியந்து பார்க்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உலகக்கிண்ணம் போட்டியின் நேற்றைய ஆட்டத்தல் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் நேருக்கு நேர் மோதின. போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி, அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். எதிர்முனையில் விளையாடிய விராட்கோஹ்லி 77 பந்துகளில் 82 ரன்களை குவித்திருந்தார்.

போட்டியின் இடையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை டோனி, எல்லைக்கோட்டிற்கு வெளியில் அனுப்பினார்.

எதிர்முனையில் இருந்த கோஹ்லி வாயை பிளந்தபடியே சிறிது நேரம் கண் இமைக்காமல் அதனை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்